மேஷ ராசிக்காரர்களுக்கு :உங்களுக்கு இருந்து வந்த காரிய தடைகள் விலகி விடும் . மேலும் வருமானம் பெருகும் வீட்டில் சந்தோஷம் மகிழ்ச்சி கூடும் .ஆடை ,ஆபரண சேர்க்கை உண்டு .வியாபாரத்தில் நல்ல சூழல் உருவாகும் இந்த வாரம் மகிழ்ச்சியான வாரம் .அதிர்ஷ்ட திசை :மேற்கு அதிஷ்ட எண் :27 அதிஷ்ட நிறம் :மஞ்சள்
ரிஷப ராசிக்காரர்களுக்கு :இந்த வாரம் உங்கள் மகிழ்ச்சியான வாரமாகும் .சகோதர வகையில் குடும்பத்தில் நல்ல ஆதரவும் ,ஆதாயமும் உண்டாகும் .பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும் .கணவன் மனைவி அன்னோன்யம் பெருகும் .வாகன பயணத்தின் போது கவனம் தேவை. ஆன்மீக சிந்தனை மேலோங்கு .முக்கிய நபர்களை சந்திப்பீர்கள் .அதிர்ஷ்ட திசை :வடமேற்கு அதிஷ்ட எண் :12 அதிஷ்ட நிறம் :நீல நிறம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு :இந்த வாரம் குடும்பத்தில் குழப்பம் இருந்தாலும் நீங்கள் அமைதி காத்தால் அவை நற்சிந்தனையாக மாறும் .ஒரு சிலருக்கு அசதியும் ,சோர்வும் ஏற்பட்டு விலகும் .போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள் உடல்நலத்தில் கவனம் தேவை . பணி சார்ந்த அலைச்சல்கள் இருந்தாலும் வருமானம் இருக்கும் இந்த வாரம் சுகம் நிறைந்த வாரம் .அதிஷ்ட திசை :கிழக்கு அதிஷ்ட எண் :5 அதிஷ்ட நிறம் :சாம்பல் நிறம்
கடக ராசிக்காரர்களுக்கு :குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மனதிருப்தியை ஏற்படுத்தும். துணைவியின் உதவி உங்களுக்கு காரியத்தை சாதிக்க வெற்றிகரமாக இருக்கும் . வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும் .உடல் நலத்தில் நலம் உண்டாகும் . சேமிக்க தேவையான பணம் வந்து சேரும் .மனதளவில் தன்னம்பிக்கையும் பிறக்கும் . நினைத்த காரியம் கைகூடி வரும் அதிர்ஷ்ட திசை :தெற்கு அதிஷ்ட எண் :11 அதிஷ்ட நிறம் :பச்சை நிறம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு :உங்களுடைய பேர் புகழ் கூடும் ஆனால் நாவடக்கம் தேவை . பணியிடத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும் .மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி வாரத்தின் பிற்பகுதியில் வந்து சேரும் .தன்னம்பிக்கை உடன் செயல்பட வேண்டிய வாரம் .இந்த வாரத்தில் உங்களுக்கு அதிஷ்ட திசை :வடக்கு அதிஷ்ட எண் :10 அதிஷ்ட நிறம் :பச்சை
கன்னி ராசிக்காரர்கள் :கோபத்தை குறைத்துக் கொண்டால் காரியத்தில் வெற்றி . குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும் .தடைப்பட்ட பணிகள் விரைவில் முடியும். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு நீண்ட நாள் பிரச்சனையை தீர்க்கும் . கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும் .வீண் பேச்சை தவிர்த்தால் பணவரவு உண்டு பயணங்களில் ஆதரவான நிலை ஏற்படும் .வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். அதிஷ்ட திசை :வடகிழக்கு அதிஷ்ட எண் :14 அதிர்ஷ்ட நிறம் :சிகப்பு நிறம்
துலாம் ராசிக்காரர்களுக்கு :இந்த வாரம் அமைதி காக்க வேண்டிய வாரம் . கருத்துக்களை வெளிப்படையாக சொல்வது வேலை விஷயத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தாது .குடும்பத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும் .உணவு விஷயத்தில் எச்சரிக்கை தேவை .துறை சார்ந்த பணிகளில் அலச்சல் ஏற்பட்டாலும் வருமானம் உண்டு .ஆன்மிக ஈடுபாடு நல்ல பலனை தரும் .அதிர்ஷ்ட திசை :மேற்கு அதிஷ்ட எண் :1 அதிர்ஷ்ட நிறம் :இளம் சிகப்பு
விருச்சிக ராசிக்காரர்களுக்கு :ஆன்மீக சிந்தனை மேலோங்கும் வாரம் .இந்த வாரத்தில் பண வரவு உண்டு .சுப காரியங்கள் நடைபெறும் .குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மாறி சந்தோஷம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் . நவீன கருவிகள் வாங்கி மகிழ்வீர்கள் .தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள் . அதிர்ஷ்ட திசை :மேற்கு அதிர்ஷ்ட எண் :6 அதிர்ஷ்ட நிறம் :நீல நிறம்
தனுசு ராசிக்காரர்களுக்கு :தெளிவு பிறக்கும் வாரம் .இந்த வாரத்தில் உங்கள் காண மதிப்பும் ,புகழும் உயரம் .வழக்கு விஷயங்களில் சாதாரணமான சூழல் ஏற்படும். சிறு சிறு சச்சரவு வந்து விலகினாலும் உங்களுக்கு இந்த வாரம் லாபகரமான வாரம்.விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள் .வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும் .அதிர்ஷ்ட திசை :தென் கிழக்கு அதிஷ்ட எண் :10 அதிஷ்ட நிறம் :சிவப்பு
மகர ராசிக்காரர்களுக்கு :இந்த வாரம் நன்மை நிறைந்த வாரம் .வருமானம் கூடும் பொன் பொருள் சேரும் .வியாபாரத்தில் நல்ல லாபகரமான சூழ்நிலை ஏற்படும் . எதிர்காலம் சார்ந்த திட்டங்கள் வெற்றி பெறும் .உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும் சிறு கடன்கள் வந்தாலும் அதை அடைக்க கூடிய அளவுக்கு வருமானம் வரும் .குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட திசை :தெற்கு அதிஷ்ட எண்:2அதிஷ்ட நிறம் :சிவப்பு
கும்ப ராசிக்காரர்களுக்கு :இது சந்தோசமான வருமானம் வரும் வாரம் .இந்த வாரத்தில் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்ல சூழலில் ஏற்படுத்தும் .நெருக்கடியான காலகட்டத்தை தாண்டி விட்டீர்கள் .உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை . பள்ளி பணிகளில் இருந்து ஆர்வமின்மை குறைந்து குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக வருவார்கள் .வியாபாரத்தில் முன்னேற்றமான சூழலில் அமையும் .இந்த வாரம் லாபகரமான வாரம் அதிர்ஷ்ட திசை :மேற்கு அதிஷ்ட எண் :15 அதிஷ்ட நிறம் :வெளி பச்சை நிறம்
மீன ராசிக்காரர்களுக்கு :இது மகிழ்ச்சி நிறைந்த வாரம் .இந்த வாரம் வெற்றிகரமான செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் .எதிர்கால திட்டங்கள் வெற்றி பெறும் . வருவாயில் இருந்த நெருக்கடிகள் குறைந்து லாபகரமான சூழ்நிலை ஏற்படும் . இடமாற்றம் எண்ணங்கள் உருவாகினாலும் சொந்த தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு .அதிர்ஷ்ட திசை :தெற்கு அதிஷ்ட எண் :5 அதிஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




