preloader

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாத உத்திராயண காலத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாத உத்திராயண காலத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாத உத்திராயண காலத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தை மாத பிறப்பை வரவேற்கும் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது .திருவண்ணாமலை0 6.01.2026 பஞ்ச பூத தலங்களில் அக்னிதலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகும் விளங்கும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஆண்டுக்கு நாலு முறை கொடியேற்றம் நடைபெறும் .அதில் ஆடி மாதத்தில் தட்சன புண்ணியகால உற்சவம் ,கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழாவின் போது ஆனி மாதத்தில் ஆனி பிரமோற்சவம் .தற்போது மார்கழி மாதத்தில் உத்ர ராயண புண்ணிய காலம் உற்சவம் நடைபெறுகிறது .இப்படி நாலு முறை அண்ணாமலையார் கோயிலில் தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று அண்ணாமலையார் கோயிலில் தை மாதப் பிறப்பை வரவேற்கும் விதமாக உததிராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா தங்கக்கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது .அதிகாலை உதிராயண புண்ணியகால உற்சவத்தை முன்னிட்டு திருக்கோயிலில் உட்பிரகாரத்தில் உண்ணாமலை அம்மன் ,அண்ணாமலையார் ,விநாயகர் ,பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தங்க கொடிமரம் அருகில் எழுந்தருளி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம் காலை 6.17 மணியளவில் நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் .கொடியேற்றுத்தனை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் உண்ணாமுலை அம்மன் ,அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு மாட விதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி தருவார். பத்தாம் நாளான தைப்பொங்கல் அன்று தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று விழா உற்சவமானது நிறைவு பெறும்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இதை பத்மம் யூடியூப் சேனலில் வீடியோ காட்சியாக காணலாம்