தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வியாழக்கிழமை.அன்றைய தினம் வீடுகளில் சர்க்கரை பொங்கல் ,கரும்பு ,மஞ்சள் ,பருப்பு வகைகள் தேங்காய் ,பூ ,பழம் ,வெத்தலைப்பாக்கு வைத்து சூரிய பகவானை வேண்டி சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.இந்த ஆண்டு வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி தை மாதம் பிறக்கிறது.
இதை ஒட்டி அன்றைய தினம் பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரம் எது என்பதை பார்க்கலாம் ஜனவரி 15ஆம் தேதி வியாழக்கிழமை கேட்டை நட்சத்திரம் நாள் முழுவதும் எனவே அன்றைய தினம் பொங்கல் வைப்பது எந்த நேரத்தில் பொங்கல் வைப்பது இல்லத்தில் செல்வத்தையும் மகிழ்ச்சியும் ஆரோக்கியத்தையும் தரும்.
பொங்கல் வைக்க உகந்த நேரம் அதிகாலை 4:30 மணி முதல் 6:00 மணி என்றாலும் சூரிய உதயத்திற்கு பின் வைப்பது தான் உகந்தது .எனவே காலை 10:30 மணி முதல் 11 மணிக்குள்ளும் அல்லது மதியம் 1 மணியிலிருந்து 1:30 மணிக்குள்ளோம் வைக்கலாம்.
இதைப் பற்றிய வீடியோ காட்சிகளுக்கு பத்மம் யூடியூப் சேனலை பாருங்கள்.




