preloader

அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை காண வார ராசிபலன்:

அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை காண வார ராசிபலன்:

அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை காண வார ராசிபலன்:

மேஷ ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை கூடும் வாரம் மறைமுக தடைகளை உடைத்து எறிவீர்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். கடினமான விஷயங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள் உங்கள் முயற்சிக்கு ஏற்ற வருமானம் உண்டு குழந்தைகளால் நல்ல மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் பூர்விக சொத்து முதலீடுகளில் லாபம் தரும் எனவே நிதானமாக செயல்பட்டால் வெற்றிகரமான வாரமாக.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த வாரம். பெரியோர்கள் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வித்துறையில் சாதகமான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படும். பயணம் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையும், வேண்டிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழுங்கள். இது பண வரவுக்கு உகந்த வாரமாகும். இந்த வாரத்தில் உங்களுக்கு.

அதிர்ஷ்ட திசை :கிழக்கு

அதிஷ்ட எண் :16

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆக்கப்பூர்வமான வாரம். பூர்வீக சொத்துக்களில் பிரச்சனை தீர்வு ஏற்படும். புதிய வாகனங்கள் வாங்க யோசிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு புகழும், வருமானமும் கூடும். அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். நினைத்ததை முடிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு அமையும் .குடும்பத்தார் உங்களுக்கு முழு ஒத்துழைப்பை தருவார்கள்.

அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு

அதிஷ்ட எண்: 6

அதிஷ்ட நிறம்: பச்சை

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திடீர் வரவு உண்டு. நிண்டனால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். சகோதரர்கள் வழியில் உங்களுக்கு ஒத்துழைப்பு கூடும். அத்தியாவசிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத வரவு உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். உடல் ஆரோக்கிய பிரச்சனை குறையும். சில காரியங்கள் தடை ஏற்பட்டு விலகும். அமைதியான வாரம்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4

அதிஷ்ட நிறம்: சாம்பல்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வார்த்தையில் நிதானம் தேவை. உயர்ந்த அதிகாரியிடத்தில் வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் புரிதல் அதிகரிக்கும். வியாபார விஷயங்களில் பொறுமையை உடன் கையாளுவது மிகவும் நல்லது. கலைத்துறைகள் உங்களுக்கு ஆர்வம் ஏற்படும். மனதில் ஏற்படும் குழப்பத்தை நீக்கி தொழிலில் கவனம் செலுத்தவும். இந்த வாரம் ஆர்வம் மிக்க வாரம்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 8

அதிஷ்ட நிறம்: நீல

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய வாரம். வழக்கு விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சேமிப்புகள் அவசியம் கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் கையாள வேண்டும். சிரமம் குறையும் வாரம்.

அதிஷ்ட திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 15

அதிஷ்ட நிறம்: பச்சை

துலாம் ராசிக்காரர்களுக்கு சுப காரியங்கள் நடைபெறும் வாரம். வீட்டில் மகிழ்ச்சியான சுப காரியங்கள் நடைபெறும். சிந்தனையிலிருந்து குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். அரசு வேலையில் நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும். குழந்தைகள் வழியில் நல்ல செய்தி வரும். ஊக்கம் தரும் வாரம்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் வரும் வாரம். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும் .தந்தையிடம் இருந்த வேறுபாடு குறையும். சமூகப் பிரச்சினைகள் நல்ல தெளிவு ஏற்படும். வியாபாரப் பணிகளில் போட்டிகள் உண்டாகும். காப்பீடு பணிகள் ஆதாயம் அடைவார்கள். எதிர்காலம் சார்ந்து சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். இது நலம் நிறைந்த வாரம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 15

அதிஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு ராசிக்காரர்களுக்கு இது மனநிறைவு நிறைந்த வாரம். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். வேலையாட்களை மாற்றம் குறித்து எண்ணங்கள் மேற்படும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் நல்ல செய்தி வந்து சேரும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு கேட்ட லாபத்தை கிடைக்கும். இது மனநிறைவும் பணவரவும் நிறைந்த வாரம்.

அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்: 9

அதிஷ்ட நிறம்: சிகப்பு

மகர ராசிக்காரர்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டிய வாரம். உணவு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. உடல் விஷயத்தில் நல்ல கவனத்தை கடைபிடிக்க வேண்டும். நீண்ட நேரம் இரவு கண் விழிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்கள் உங்கள் உடல் சோர்வை உண்டாக்கும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். குடும்பத்தினிடம் அனுசரித்துச் செல்லவும்.

அதிஷ்ட திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 15

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு

கும்ப ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகரமான வாரம். சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். முயற்சிக்கு உண்டான மதிப்புகளும் வெற்றிகளும் கிடைக்கும். பண வரவு தேவைக்கு ஏற்ப கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். ஆன்மீகப் பணியை புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீன ராசிக்காரர்களுக்கு இது புகழ் மேம்படும் வாரம். சாதகமான செயல்பாடுகள் உங்களை வெற்றிகரமாக மாற்றும். சிக்கலான விஷயங்கள் கூட எளிதில் முடிப்பீர்கள். மருத்துவ அணுகு முறையில் சில மாற்றம் தேவை. பொது நல செயல்கள் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகள் சாதகமான முடிவுகள் ஏற்படும் இந்த வாரம் புகழ் மேம்படும் வாரம். மகிழ்ச்சியான வாரம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிற: கோல்டு